மாரியம்மன் கோயில் தேரைப் பராமரிப்பதில் அலட்சியம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா முடிந்து 15 நாட்களாகியும், தேரை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கு உண்டான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் தேர் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து 4-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சியும், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய உற்சவர் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ம் தேதி தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு இலுப்பை மற்றும் தேக்கு மரத்தை கொண்டு புதிய தேர் செய்யப்பட்டது. அதில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்றுச் சிற்பங்கள் விஷ்ணு, முருகர், விநாயகர் உள்ளிட்ட 220 மரசிற்பங்கள் 120 பொதியல் சிற்பங்கள் அடங்கிய எண்கோண வடிவில் புதிய பரிமாணத்தில் காட்சியளித்த தேர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

53 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட இந்த தேரானது, 12 அடி உயரத்தில் ஐந்து நிலைகளைக் கொண்டதாகவும் சுவாமிகள் எழுந்தருளும் சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கண்குளிர தேரில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவரையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழாவும் நிறைவுபெற்றது.

ஆனால், விழா முடிவடைந்து 15 நாட்கள் கடந்தும் தேரை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கு உண்டான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் தேர் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வரலாற்றை தாங்கி நின்ற நூறு ஆண்டுகள் கடந்த பழைய தேருக்கு பதிலாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய தேர் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேரோட்டம் நடைபெற்று முடிந்து இன்று வரையிலும் அதை முழுமையாக பாதுகாத்து பராமரிப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், தேர் மழை,வெயில், காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. உடுமலையின் வரலாற்றையும் காவல் தெய்வமான அம்மனையும் சூலத்தேவரையும் தாங்கி நிற்கும் தேர் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.

கோவில் வளாகத்திலேயே ஆய்வாளர் மற்றும் செயலர் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் தேர் நிலையை கடந்துதான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கண்ணுக்கு எதிராக இரும்பு கம்பிகளுடன் அழகில்லாமல் காட்சி அளிக்கும் தேரை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உடுமலை மாரியம்மன் கோவில் தேரை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...