வெளிமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனை - கோவையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



கோவை: வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை மற்றும் அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுவினை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் அமைத்துள்ளது.



கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, குன்னூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் கோவை மண்டல அளவிலான் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.



மாநில அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.



மேலும், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கூடுதல் இயக்குனர்கள் சிறப்பு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...