கோவையில் பா.ம.க சார்பில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - கனரக ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் பெண் கனரக வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவிற்கு (AMR), அன்புமணி ராமதாஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தார்.



கோவை: மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்த காலநிலை மாற்றம் விவகாரத்தில் அவசர நிலை பிரகடனம் என்பதை உலக நாடுகள் அமல்படுத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. கோவை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில்,இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் கால நிலை மாற்றம் குறித்த தலைப்பில் உரையாற்றபட்டது.



குறிப்பாக அதிக வெப்பம், பருவ கால மாறுபாட்டால் ஏற்படும் கடும் வெப்பம் மற்றும் மழை, மரம் வளர்த்தலின் தேவை, நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம்,சுற்று சூழலை பேணுவது உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் பெண் கனரக வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவிற்கு (AMR) அன்புமணி ராமதாஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தின் முடிவில் பாமக தொண்டரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ், மாவட்ட தலைவர் கோவை ரமேஷ், பாமக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...