கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

துடியலூர் பேருந்து நிலையம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: துடியலூர் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதனை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.



கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

அதேபோல், அதிமுக சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக புறநகர் வடக்குமாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், ஐ.டி.விங்க் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் ஐ.டி.ஐ. ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் வனிதாமணி, மாரிச்சாமி, வட்ட செயலாளர்கள் சாந்திபூஷன், பந்தல்வீடு பிரகாஷ், ஜெயக்குமார், சுரேஷ், சுரேஷ்பாபு, காளிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...