கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானை - படம்பிடிக்க முயன்றவர்களை துரத்தியதால் பரபரப்பு!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், காட்டு யானை ஒன்று சாலையை கடக்கும் போது, அதை செல்போனில் படம் எடுக்க முயன்ற வாகன ஓட்டிகளை யானை துரத்தியதால் அவர்கள் அலறியடித்து ஓடினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை துரத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.

வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.



இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் பகுதியில் சாலையை கடக்க ஒற்றை காட்டு யானை வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.



இதனையடுத்து, யானையை தங்களது மொபைல் போனில் படம் பிடித்ததுடன், சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென அவர்களை துரத்தியது. யானை துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் யானை சாலையைக் கடந்து அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...