கோவை அருகே மனைவி கொலை - காவல் நிலையத்தில் கணவன் சரண்!

கோவை சூலூரில் கணேசன் - நிவேதா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நிவேதாவை கொலை செய்து விட்டு கணேசன், சூலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேசன். இவர், நிவேதா (வயது24) என்ற பெண்ணை எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணேசன், மனைவி நிவேதாவை பல முறை எச்சரித்தும், அதை கேட்காமல் முருகனுடான உறவைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வேலை முடிந்து கணேசன் வீடு திரும்பியபோது, முருகனும் நிவேதாவும் தனிமையில் இருந்ததைப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எச்சரிக்கையையும் மீறி தவறு செய்த மனைவி நிவேதாவை, கணேசன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தினார்.

இதில், படுகாயமடைந்த நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.



அப்போது, நிவேதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிவேதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து மனைவியை கொலை செய்து விட்டு, சூலூர் காவல் நிலையத்தில் கணேசன் சரண் அடைந்தார். கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...