கோவையில் சிறுவனை பறவையை போல் கூண்டில் அடைத்து கொண்டு சென்ற நபர் - வீடியோ வைரல்!

உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தில் பறவைகள் கூண்டில் 5 வயது சிறுவனை அடைத்து கொண்டு சென்ற சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்து கொண்டு பயணிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



கோவை: ஈச்சனாரி அருகே சிறுவனை கோழிகள் அடைக்கும் கூண்டில் வைத்து அழைத்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர்.

இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...