பல்லடம் அருகே குப்பைகள் கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து மக்கள் சாலைமறியல்!

பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் அருகேயுள்ள சாய் குரு கார்டன் பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்த ஊராட்சி செயலாளரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோதமாக குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு இடையில் அமைந்துள்ளது சாய் குரு கார்டன். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் இருந்து கோழி கழிவுகள், ஊராட்சி குப்பைகள் அனைத்தையும் சாய் குரு கார்டனில் உள்ள ஓடையில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை குப்பைகள் கொட்டுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நீரோடையில் குப்பை கொட்டி வைத்துள்ளதால் அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கரைப்புதூர் ஊராட்சியில் இருந்து குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டர் ஒன்றை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது, பேச்சை வார்த்தைக்கு வந்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும், விரைவில் குப்பை கிடங்கு அமைத்து குப்பைகளை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...