பல்லடத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தம்! - பரபரப்பு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இளம் வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்ததால் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக உள்ள 84 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனவும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை புதிதாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதன் காரணமாக, மூத்த வழக்கறிஞர் மகேஷ் என்பவர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்லடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டது.



பெருவாரியான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவளித்த நிலையில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வழக்கறிஞர்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக சங்கத்தில் பைலாவை யாரும் பின்பற்றவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்காததால் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...