அலகுமலை ஜல்லிக்கட்டு விவகாரம் - கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போலீசார் கலைக்க முயன்ற நிலையில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை ஊராட்சியில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட சேமலை கவுண்டம்பாளையம், சுப்பையகவுண்டம்பாளையம், அலகுமலை, வேலாயுதம்பாளையம், கோவில்பாளையம், செட்டிப்பாளையம், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கூட்டம் ரத்தானது.



இந்த நிலையில், இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதாகவும் எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என கூறி ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழரின் பாரம்பரிய விளையாட்டை சட்டஒழுங்கு பிரச்சினை இல்லாமல் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்ற போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



ஜல்லிக்கட்டு வேண்டாம் என ஒரு தரப்பினரும் வேண்டும் என ஒரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் கிராம சபை கூட்டம் எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனிடையே, வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மீண்டும் கிராம மக்கள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...