தாராபுரம் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை - மூலனூருக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தகவல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை, மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கியிருந்த சிறுத்தை, விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள், கால்நடைகளை அடித்துக்கொன்று சாப்பிட்டு வந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், சிறுத்தை குறித்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகதாதோடு, கூண்டிலும் சிக்கவில்லை.

இருப்பினும், சிறுத்தை அடிக்கடி வந்து போகும் இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து பிடிக்கவும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டும் சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களுக்கு மாற்றி வைத்தபோதும், சிறுத்தை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தை விடுத்து மற்ற இடங்களில் சுற்றி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

ஊதியூர் வனப்பகுதியில் சுமார் ஒரு மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தையால், ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மூலனூர் அருகே பெரமியம் என்ற பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் நேற்று காலை 6.30 மணியளவில் பொன்னுசாமி என்ற விவசாயி சிறுத்தை சென்றதை பார்த்ததாகத் தெரிகிறது.

அதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பதிவான கால்தடங்களை ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தையின் கால்தடம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில், ஊதியூர் மலையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூலனூர் அருகே பெரமியம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று சிறுத்தையை விவசாயி ஒருவர் பார்த்துள்ளார். அங்கு சிறுத்தை கால்தடம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் சிறுத்தை குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

ஒருவேளை சிறுத்தை எங்காவது பதுங்கி இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்து இடம்பெயர வாய்ப்புள்ளது. சிறுத்தையின் கால்தடம் இருந்த திசையை பார்க்கும்போது அது மேற்கு பகுதியை நோக்கி சென்றுள்ளது. அதாவது ஊதியூர் வனப்பகுதியை நோக்கி மீண்டும் செல்ல வாய்ப்புள்ளது, என்றார்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...