மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் - ரூ.1.54 கோடிக்கு பருத்தி விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.54,61,346க்கு பருத்தி விற்பனையானது. பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8128ம், குறைந்தபட்சவிலையாக ரூ. 6500ம் நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 715 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.



பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 8128ம் குறைந்தபட்சவிலையாக ரூபாய் 6500ம் சராசரி விலையாக ரூ.7350ம் நிர்ணயிக்கப்பட்டது.



பருத்தியின் மொத்த அளவு 7083 மூட்டைகள் (குவிண்டால் 2177.96). இவற்றை ரூ.1,54,61,346/க் 29 வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் வாங்கினர்.

இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...