கோவையில் ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல்! - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

கோவை சூலூரில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரியை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


கோவை: சூலூரில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.

அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...