கோவையின் சாலை பணிகளுக்கு ரூ.223 கோடி முதல்வர் ஒதுக்கியுள்ளார்..! - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவையில் கடந்த ஆட்சியில் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தற்போது புதிய சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் 121 கிமீ க்கு 223 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



கோவை: கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். அதன்படி, 2022-23 தார்சாலை பணிகள், சீர்மிகு நகர திட்டம், பொது நிதிப்பணிகள் என கோவை சிங்காநல்லூர், தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 32.78 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது.



கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனி பகுதியில் தார் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்படுவதாகவும், குறிப்பாக சாலைப்பணிகளுக்கான ஒப்புதல் முதல்வர் மூலம் பெறப்பட்டு டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படுவதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் புதுப்பிக்கப்படாத தார் சாலைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டு எனவும், அதனடிப்படையில் சாலைப்பணிகள் மட்டும் ஏறத்தாழ 70% சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளது எனவும் கூறினார்.

தற்போது புதிய சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த குறுகிய காலத்தில் 121 கிமீ க்கு 223 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என கூறிய அமைச்சர், இது கோவை மாநகராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும் என தெரிவித்தார். இடையர்பாளையம்- தடாகம் சாலைப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மெட்ரோ பணிகள் DPR இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும் என்று கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இல்லாத வளர்ச்சி திட்டங்கள் முதலமைச்சரால் கோவைக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் மீது அக்கறை கொண்டு முதலமைச்சர் இவற்றை வழங்கி வருகிறார்.

மேலும் செம்மொழி பூங்கா அறிவிப்பு, எழில்மிகு கோவை என்பவை மிக சிறப்பான ஒரு திட்டம் என்று கூறிய அவர், கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய சாலைகள்தான் பழுதடைந்து உள்ளது என்றும், சாலைப்பணிகளுக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதேபோல பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் புதுப்பிக்கபடாமல் இருந்தது என கூறிய அவர், இதனையெல்லம் கவனத்தில் கொண்டுதான் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.

வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் குறித்த கேள்விக்கு, 30 நிமிட செய்தியை 3 நிமிடத்தித்கு கேட்கிறீர்கள் என பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுடன் சேர்த்து அப்பணிகளும் செய்யப்பட வேண்டியுள்ளது என பதிலளித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...