மார்ச் 24-ம் தேதி அன்று ரமலான் பிறை 1 - கோவை ஹிலால் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை. இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிப்பதாக, கோவை ஹிலால் கமிட்டி தெரிவித்துள்ளது.


கோவை: கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிறை தென்படவில்லை என்று பிறை பார்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களிலும் பிறை தென்படவில்லை. எனவே நாளை வெள்ளிக்கிழமையை ரமலான் பிறை 1 என கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பிறை பார்க்கும் விழா கமிட்டியின் கோவை மாவட்ட தலைவர் ரஹீம் அஜரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை கமிட்டியின் பிறை பார்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளி வாசல்களில் நடைபெற்று பிறை சம்பந்தப்பட்ட முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு கமிட்டியாக செயல்பட்டு வருகிறது.

ரமலான் பண்டிகையின் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிறை சம்பந்தமான தகவல்களை தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் உறுதி செய்வதற்காக விசாரித்தோம், தொடர்பு கொண்டோம்.

இந்தியாவின் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சென்னை போன்ற தலைநகரங்களிலும் தமிழகத்தினுடைய எந்த மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இறுதியாக தமிழகத்தினுடைய தலைமை காசிர் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களும் இறுதியாக தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை என கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது என கோவை ஹிலால் கமிட்டி சார்பில் அறிவிக்கின்றோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...