பொள்ளாச்சி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகார் - தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நாலாமூல சுங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வேங்கடபதி பெருமாள்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள நாலமூல சுங்கம் பகுதியில் விஸ்வகர்மா சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வரும் வேங்கடபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் வழித்தடத்தையும் கோயில் அருகே உள்ள பாலாற்றங்கரை நீர் வழி தடத்தை தனியார் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிகரமித்து வழித்தடத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் தோட்டத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



மேலும், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...