தாராபுரம் அருகே கோயிலில் மின்சாரம் பாய்ந்து விபத்து - பூசாரி சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோயிலில் எரியாத மின்விளக்கை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கிய விபத்தில், அந்தக் கோயிலின் பூசாரி பாலசுப்பிரமணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் திருமுருகன் பூண்டி ஒன்றாவது வீதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் தங்கவேல் மகன் பாலசுப்பிரமணி (வயது 58). இவர் தாராபுரம் பழைய கோட்டைமேட்டு தெருவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்மான வீரேஸ்வரா சுவாமி திருக்கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

அம்மாவாசை தினம் என்பதால் திருப்பூரில் இருந்து மதியம் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்துவிட்டு அங்கு இருந்த மின்விளக்குகளை ஆன் செய்தார். அப்போது மின்விளக்குகள் எரியவில்லை. இதனால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில். பாலசுப்ரமணியம் மயங்கி கீழே விழுந்துள்ளார்.



இந்த நிலையில் கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பக்தர்கள் பூசாரி மயங்கி கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் பூசாரி பாலசுப்பிரமணியனுக்கு ஜமுனா ராணி 55 என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அம்மாவாசை நாளிலேயே கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி உயிழந்த சம்பவம் பழைய கோட்டைமேட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...