பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கல்!

பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு நவீன செம்மொழி பூங்கா மற்றும் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ஆகிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பீளமேடு அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


கோவை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை மற்றும் கோவையில் நவீன செம்மொழி பூங்கா, மெட்ரோ ஆகிய அறிவிப்புகளை வரவேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், கோவையில் நவீன செம்மொழி பூங்கா, கோவைக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களை இன்று பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் வழிகாட்டுதலின் படி பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் சிக்னல் அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட கழக செயலாளர்கள் சபரி தன்ராஜ், ஆ. மாடசாமி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பகுதி கழக நிர்வாகிகள் பூவை துரைசாமி, பந்தல் ரவி, ஜெயராஜ், லக்ஷ்மி

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. தனபால், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா. மணிகண்டன், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...