'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் ஆகிறது -சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர்

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், தொழில்துறையினர் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்து இருந்த மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம், இந்திய தொழில் வர்த்தகசபை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். டெல்லியிலும் அவரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 



இதைத்தொடர்ந்து, கோவை–பெங்களூரு இடையே 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என்று சென்ற வருடம்  அறிவித்தார். இந்நிலையில், புதிய ரயிலுக்கான நேர விவரம் இதன்படி கோவை–பெங்களூரு புதிய ரயில் பகல்நேர ரயிலாக இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து 22666 என்ற எண்ணுள்ள உதய் எக்ஸ்பிரஸ் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு போய் சேருகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து 22665 என்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடைகிறது. புதிய ரயில் இயக்கப்படுவதற்கான தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் கோவையில் 'உதய் எக்ஸ்பிரஸ்' விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. 

இது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்; கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பணிகள் நடந்து வருகிறது. உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்) ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும். பயணநேரம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. தற்போது வரை ஒரு சில பெட்டிகள் மட்டுமே உள்ளது. விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...