கோவை ரேஸ்கோர்ஸில் குழாய் உடைப்பு - வெளியேறும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி

கோவை ரேஸ்கோர்ஸ் சாலைப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி என்பது கோவை மாநகரின் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டன. பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கிற்காகவும் பல்வேறு பொதுமக்கள் அங்கு வருகை புரிகின்றனர். மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் அப்பகுதியில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.



குழாய் உடைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறி வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்யும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுததுள்ளனர். கோடைகாலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இது போன்ற பைப் உடைப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...