வங்கிகளில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்- பாஜக இளைஞர் அணி

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசால் அங்கீகரிப்பட்டு ரிசர்வு வங்கியால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. 

ஆனால் பெரும்பாலான கடைகள், வங்கிகள், பேருந்துகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். 

இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தவறான பிரச்சாரங்களால் தான் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் வங்கி வாசலில் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பாஜக இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...