கோவையில் நாளை கல்விக் கடன் முகாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்காக ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் உதவி பெறுவதற்கான முகாம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கிழ்கண்ட ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 (மாணவர் மற்றும் பெற்றோர்) மற்றும் ஆதார் அட்டை(மாணவர் மற்றும் பெற்றோர்)

2. பான்கார்டு/பாஸ்போர்ட்/விசா நகல்

3. இருப்பிட சான்று

4.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம்-16/16ஏ

5. தாசில்தாரிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட வருமான சான்றிதழ்

6. அரசு ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற சான்று

7. SSLC HSC மற்றும் டிகிரி: மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்

8. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான கடிதம்

9. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டண விவர கடிதம்

10. கடைசி ஆறு மாதங்களுக்கு வரவு செலவு மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஆகியவை எடுத்து வந்து அணுகவும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...