கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம்

கோவையில் நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகள், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டன.


கோவை: கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) சுகாசினி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் மூலம் நவீன இணையவெளி குற்றங்கள் மற்றும் எதிர்கால இணைய வழி குற்ற அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



இதில், நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகளும், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள், பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் Online பண பரிமாற்றத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.



மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...