வெள்ளகோவில் மதுக்கடைக்கு எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர்சாதன மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.



இந்நிலையில் தற்போது அதேபகுதியில் நவீன குளிர்சாதன வசதியுடன் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...