திருப்பூர் மாவட்டத்தில் 93 மையங்களில் 12 பொதுத்தேர்வு - மாநகராட்சிப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 160 மாணவ, மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி ஜெயா பாய் பள்ளியில் பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2023-க்கான பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

இந்தத் தேர்வானது வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 93 தேர்வு மையங்களில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும்; தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் முதல் நாளான இன்று திருப்பூர் ஜெயா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...