ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் - ரூ.89 லட்சத்திற்கு விற்பனை

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்திற்கு 3961 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8292-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6840-க்கும் சராசரி விலை ரூ 7350-க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 420 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வணிகர்கள், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8292-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6840-க்கும் சராசரி விலை ரூ 7350-க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த பருத்தியின் மொத்த அளவு 3961மூட்டைகள். அவற்றின் குவிண்டால் அளவு 1216.30. 18 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்த பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 89,05,091/-.என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...