கோவை பெண்கள் சிறையில் மகளிர் தின கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை ஒட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் தனி கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இதில் தண்டனை, விசாரணை என சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவை இரவேல் மறை மாநிலம் மற்றும் நிர்மலா கலைக் கல்லூரி இணைந்து பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தியது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...