வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு - போத்தனூர் போலீசார் விசாரணை

கோவை போத்தனூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ், ராஜூ ஆகியோரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...