வால்பாறை நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம் - உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை வால்பாறை நகராட்சியில், நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் பெண்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், தொண்டு நிறுவன பெண்கள் ஆகியோர் இணைந்து நகராட்சி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இதில், பெண்களுக்கு கோலம் வரைதல் போட்டி நடத்தப்பட்டு, நன்றாக கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...