எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017”

எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017” கண்காட்சி மற்றும் விற்பனை பிப்ரவரி 18ம் தேதியன்று துவங்கி ஞாயிறன்று (இன்று) நடைபெற்று வருகிறது. 



ஃபிக்கி (எப்ஐசிசிஐ) லேடீஸ் ஆர்கனைசேஷனின் கோவை பிரிவு சார்பில், மகளிர் தொழில் முனைவோர் பொருட்காட்சி, “உமன் என்டர்பிரனர் பஜார் 2017” எனும் பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தயாரிக்கப்படும் மகளிர் உற்பத்தி பொருட்கள் இங்கு 6-வது ஆண்டாக கண்காட்சியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் பெண் தொழில் முனைவோர், ஆண்களுக்கு சவாலாக பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர். இந்த கண்காட்சி விரிவான தொடர்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு, மகளிருக்கு உதவும் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய வாய்ப்புகள் என்று உற்சாகமாக தகவல் பரிமாற்றம் பெற்று பயன்பெறவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவுவது கடந்த கால அனுபவமாகும். முழுமையாக, வணிக வளர்ச்சிக்கு பலவகையிலும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. 

துவக்க நிலையிலுள்ள மகளிர் தொழில் முனைவோர், இடைநிலையில் உள்ளவர்கள், டாப் இடத்தில் உள்ளவர் என்று அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.



இதில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஃபாஷன் உடைகள், சாரீஸ், சல்வார், பிளாக் பிரிண்ட்ஸ், காலனிகள், டெரகோட்டா ஜீவல்லரி, வெள்ளி மற்றும் செயற்கை ஜுவல்லரி, கற்கள் பதித்த ஆபரணங்கள், லினன், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுப் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பான தயாரிப்புகள் இன்ஜினியரிங் பொருட்கள் என ஏராளமான மகளிர் படைப்புகள் வாங்கலாம்.



முன்னதாக இந்த கண்காசியின் துவக்க விழாவில் கோவை, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சுகுணா லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...