திருப்பூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை - சாக்லேட்டை தின்றுவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்!

திருப்பூர் அடுத்த கே.வி.ஆர்.நகர் பகுதியில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள், கடையின் முன்பு மலம் கழித்து விட்டு சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகரில் கே.வி.ஆர்.நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் ஆறு கடைகளை கொண்ட திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என ஐந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கடை காலியாக உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்த ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளனர்.



இதில் மளிகை கடையில் திருடும்பொழுது அங்கிருந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு கடைக்கு வெளியே படியில் மலம் கழித்து விட்டு சென்றுள்ளனர். காலையில் கடைசி திறக்க வந்த உரிமையாளர்கள், அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...