கோவையில் குப்பைமேட்டில் திடீர் தீவிபத்து - மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவை செங்காளியப்பன் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.



கோவை: கோவை அடுத்த செங்காளியப்பன் நகர் பகுதியில் ரயில்வே பிரிட்ஜ் அருகாமையில் குப்பைமேடு ஒன்று இருந்தது.



அதில் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் தீயால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமூக விரோத கும்பல் புகைபிடித்து விட்டு நெருப்புடன் பீடி சிகரட்டை குப்பையில் போடுவதாலும், சிலர் வேண்டுமென்றே குப்பைமேடுகளில் தீ பற்ற வைப்பதாலும் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன.



முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதும், சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதும் அவசியம் என்ற அடிப்படையில் மாநகராட்சி கூடுதலாக கவனம் செலுத்தி கோடை காலத்தில் தீவிபத்துகள் ஏற்படும் முன்னே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...