தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த மக்காச்சோளம் ரூ.16.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் திருப்பூர் விற்பனை குழுவின், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதற்காக திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, 75,729 கிலோ அளவிலான மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில், திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,265க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,187 க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ. 16,82,077-க்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...