உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தை திருப்பி செலுத்தியும், செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் உடுமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர், மரிக்கந்தை, வல்லகுன்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்குப் பயிர் கடன் வழங்காமல் இழுபறி நீடிப்பதாகவும் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்த அலுவலர் நியமித்து கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தைத் திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை. இதனால் புதிதாகப் பயிர் கடன் வாங்க முடியாமல் உள்ளது. விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறியதன் பேரில் தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...