தேசிய அறிவியல் தினம்: கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலையில் ‘உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்’நடைபெற்ற கருத்தரங்கில், புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரக உதவி இயக்குனர் வேல்முருகன் கலந்து கொண்டார்.


கோவை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் சிறந்த இயற்பியல் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு (Raman Effect) ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு பிரகடனப்படுத்தியது.

அதன்படி இன்றைய தினம் இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கம்.



அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.



பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் செந்தில் நடேசன், வேளாண்மை முதன்மையர் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தின் உதவி இயக்குனர் முனைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் அண்ணா அரங்கில் காட்சிபடுத்தப்பட்டு இருந்த பல்வேறு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இதில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் படைப்புகள், இயற்கை பாதுகாப்பு சார்ந்த அறிவியல் படைப்புகளை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...