கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பொதுமக்கள் மனு அளிப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, 46 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌. இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையாளா்‌ ஷாமிளா முன்னிலை வகித்தார்.



இந்த கூட்டத்தில்‌ மேயரிடம் மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோ்ந்த பொதுமக்கள்‌ 46 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின் விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 8 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 17 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 5 மனுக்களும்‌ ஆக மொத்தம்‌ 46 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக் கொண்ட மேயர்‌, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல்‌ உதவி ஆணையர்கள் மாணிக்கம்‌(பொ), மோகனசுந்தரி, சேக்‌, உதவி ஆணையா் (வருவாய்‌) செந்தில்குமார்‌ ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ்‌, நகரமைப்பு அலுவலா்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...