தமிழக வறச்சியைப் போக்க தாகம் தீரக்கும் தாமரை யாத்திரை பா.ஜ.க. சார்பில் நடைபெறும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் பேட்டி.

தமிழகம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், குட்டைகள் போன்றவை தூர்வாரப்பட வேண்டும், வருங்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்களை நடுவதை கோரிக்கையாக பாரதீய ஜனதா கட்சி முன் வைத்து 10 ஆயிரம் மர கன்றுகளை 5 நாள் யாத்திரையில் நட உள்ளதாகவும், பா.ஜ.க.வின் மத்திய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மர கன்றுகள் நட யாத்திரை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று  அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...