2026-ல் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை

கோவை நவக்கரை பகுதியில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாக்காளருக்கு ரூ.20,000 செலவு செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.



கோவை: 2026ஆம் ஆண்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் விவசாயிகள், இளைஞர்கள், மகளிர், மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்வில் பாஜக விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் உட்பட கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. தமிழக மக்கள் இந்த மாதிரி அராஜக தேர்தலை ஏற்கின்றீர்களா?.

இந்த மாதிரி பரிசு பொருட்களை கொடுத்து தான் தேர்தல் நடத்த வேண்டுமா?. அப்படிபட்ட கட்சிகள் இருக்க வேண்டுமா? அப்படிதான் வாக்களிக்க வேண்டுமா? என மக்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக ரூ.20,000க்கு மேல் செலவு செய்துள்ளனர். இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் வளர்ச்சி பின்னால் சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் தமிழகத்தைவிட வளர்ந்துவிட போகிறது.

கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கிறார்கள். ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கிறார்கள்.

இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர் இளைஞர்களை அரசியலுக்கு வர சொன்னால், ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து ஓடுகிறார்கள்.

ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய், இடைதேர்தல் என்றால் 100 கோடி, ஆளுங்கட்சிக்கு அதுவே 250 கோடி வரை செலவாகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்பதில்லை. அதனால் அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்த உள்ளது. மக்கள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள். லஞ்சம் வாங்குவது போல்தான் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், முதலில் பணம் வாங்குவது கஷ்டம் என்றாலும் பிறகு பழகிவிடும்.

அரவக்குறிச்சியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, அதன் வளர்ச்சி அதலபாதாளத்தில் உள்ளது. அதுபோன்று, ஈரோடு கிழக்கு மாற வேண்டுமா? அதற்கு சாட்சியாக அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த நான் இருக்கிறேன். 2024 தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா? நானும் சீமான் போல பேச ஆரம்பித்துவிட்டேன்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? என்னை திட்டியது தான் அவர்கள் செய்த சாதனை. ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தை பத்திரிக்கையாளர்கள் கண்ணாடி போட்டு காண்பித்து விட்டனர். அதற்கு வணக்கங்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது முதல்வர் அறிவிப்பு என்பது தேர்தல் தோல்வி பயத்தில் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பிரசாரத்தில் அறிவித்ததை வரவேற்றாலும், சொன்ன விதம், இடம், நேரம் தவறு. அறிவித்தபடி பழைய பாக்கியை மீதமில்லாமல் பெண்களுக்கு வழங்க வேண்டும். தனது மகன் செங்கல்லை எடுத்து வந்தததால் தான் 2021 ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதலமைச்சர் அவரையே அவமானம் படுத்திக்கொள்வதுபோல் உள்ளது.

2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை வரும். இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள்?. உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதுபோல் அரசியலில் நடிக்கிறார்.

செங்கல்லை எடுத்தால், அந்த செங்கல் எடுத்து தோலை உரித்து உண்மையை சொல்வோம். 2024 தேர்தலில் பிரதமருக்காக மக்கள் வாக்களித்து தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...