கோவையில் ஆம்புலன்சிலேயே இளம்பெண்ணுக்கு பிரசவம் - பூமிக்கு வந்த அழகான தேவதை!

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண் ஷிவானிக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பிரசவ வலியில் துடித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரின் மனைவி ஷிவானி (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது.

இதனால் மிகுந்த வலியில் துடித்த அவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உக்கடம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஷிவானிக்கு வலி அதிகரித்தது.

குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நிபுணர் தமிழ்செல்வம் சாலையோரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு பைலட் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஷிவானிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் பிரசவ அவசரம் உணர்ந்து விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...