கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் பற்றி எரிந்த வாகனங்களால் பரபரப்பு

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.



இந்நிலையில் இன்று மாலை திடீரென சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெயிலின் காரணமாக தீப்பற்றி இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.



வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...