ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்


கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற பிப்ரவரி 24 மஹாசிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 112 அடி உயர, யோகத்தின் மூலமான ஆதியோகி சிவனின் திருமுகத்தை பாரத பிரதமர் ரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மனித குலத்திற்கு ஆதியோகியின் இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் உலகிலேயே மிகப் பெரிய முகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைய யோக விஞ்ஞானத்தில் உள்ள 112 வழிமுறைகளை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த முகம் அமைந்துள்ளது.

ஆதியோகிக்கு காணிக்கையாக உலகமெங்கும் நடைபெறவுள்ள மஹா யோக வேள்வியை பிரதமர் புனித தீ மூட்டி துவக்கி வைப்பார். மஹா யோக வேள்வி என்பது ஒரு எளிய யோக பயிற்சியை 10 லட்சம் பேர், ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு கற்று தந்து, அடுத்த மஹாசிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு செல்வதாகும். இதுபோல் மக்களுக்கு யோகாவை கொண்டு செல்பவர்கள் ‘யோக வீரர்கள்’ என்று அழைக்கப்படுவர்.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் இந்த ஆதியோகி பிரதிஷ்டை நிகழ்வை தன்னுடைய ‘இன்கிரெடிபில் இந்தியா’ பிரச்சாரத்தின் அதிகாரபூர்வ சுற்றலா தலமாக அறிவித்துள்ளது.

மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்கு நிறைவடையும். சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், சத்குருவின் அருளுரை, கைலாஷ் கேர், ராஜஸ்தான் ரூட்ஸ், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் நிருத்தருத்யா நாட்டிய குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அனைவருக்கும் ‘மஹா அன்னதானம்’ வழங்கப்படும்.

ஆதியோகியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு கூறும் பொழுது:

“உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச்சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச்சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு அற்ற நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்த பிறகே செல்லக்கூடிய, கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக,  அடுத்ததலைமுறையினர் இருக்கக்கூடாது. உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு,  பல்தேய்ப்பது தெரிந்திருப்பது போல, தங்களை எப்படி அமைதியாகவும்,  ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும், மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இதுநிகழ்ந்தால்,  மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும், சாத்தியமாகவும் மாறுவார்கள்.”

“தமிழ்நாட்டில், மாதத்தின் மிக முக்கியமான நாளாக அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதனால் ஒவ்வொரு மாதமும் அந்நாளில் ஆதியோகிக்கு முதல் அர்ப்பணிப்பை  இங்கு அருகில் வாழும் உள்ளூர் மக்கள் படைப்பார்கள். இந்த அற்புதமான மக்களின் அன்பையும், பக்தியையும் கௌரவிக்கும் விதமாக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.”  என்று கூறினார்.

மஹாசிவராத்திரிக்கு முன்னதாக புகழ் பெற்ற கலைஞர்கள் பங்கு பெறும் 3-நாள் யக்ஷா திருவிழா பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடன வடிவங்களை பாதுகாக்கவும், ஊக்கபடுத்தவும் நடைபெறுகிறது. இந்த வருடம் டாக்டர்.மைசூர் மஞ்சுநாத் மற்றும் டாக்டர்.மைசூர் நாகராஜ் வயலின் கச்சேரி, பத்மஸ்ரீ ஸ்ரீமதி மீனாக்ஷி சித்ராஞ்சன் பரதநாட்டிய நிகழ்ச்சியும், ஸ்ரீமதி பிஜாயினி சத்பதி மற்றும் ஸ்ரீமதி சுரூபா ஒடிசி நடன நிகழ்ச்சிகள் முறையாக பிப்ரவரி 21, 22, 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...