உடுமலை ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் - பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவும் பணி நடக்கிறது. முன்பதிவில்லாத பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்று பயணிகள் மகிழ்ச்சி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் ரயில் வரும் நேரத்தில் டிக்கெட் கவுன்டரில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சாதனங்களில் அதிகமான மக்களின் விருப்பத் தேர்வாக ரயில் பயணம் உள்ளது. பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ரயில் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதாலும், அலுப்பில்லாத பயணம் என்ற வகையிலும் பலரும் ரயில்பயணத்தை விரும்பி மேற்கொள்கின்றனர்.



தற்போது உடுமலை ரயில் நிலையத்தை அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் ஒரு டிக்கட் கவுன்டர் மட்டுமே உள்ளதால். முன்பதிவில்லாத பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும், ரயில்வரும் நேரம் நெருங்கும்போது தவிப்புடன் வரிசையில் காத்திருப்பதும், சில வேளைகளில் ரெயிலை தவற விடும் சூழலும் உருவாகிறது.



எனவே, உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கட் கவுண்டர் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் உடுமலை ரயில் நிலையத்தில் நிறுவுவதற்காக தானியங்கி டிக்கட் வழங்கும் எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரத்தில் புறப்படும் இடம், சென்று சேரும் இடம் மற்றும் ரயில் வகை உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து, 'கியூ ஆர் கோடு' ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதனால், பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்த்து, பயணிகள் விரைவில் டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும். பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான ரயில்களுக்கும் முன் பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த எந்திரம் மூலம் பெற முடியும். இந்த எந்திரம் நிறுவும் பணிகள் நிறைவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால் உடுமலை பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....