கோவையில் உலாவரும் மக்னாவைப் பிடிக்கும் பணி தீவிரம் - கும்கி யானை சின்னத்தம்பி வரவழைப்பு

கோவை பேரூர் பகுதியில் சுற்றித் திரியும் மக்னா யானையைப் பிடிக்கும் பணிக்காக கும்கி யானை சின்னத்தம்பி தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்தது.



பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரிந்த அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றிலிருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுதுவரை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கோவை மாநகர் பகுதிக்குள் சுற்றி வருகிறது.



பேரூர் பகுதியில் உள்ள SMS தனியார் கல்லூரி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் மக்னா யானை தற்போது சுற்றிவந்துகொண்டுள்ளது.



இதையடுத்து, மக்னாவைப் பிடிப்பதற்காக, டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து சின்னத்தம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.



சின்னத்தம்பி யானையை கொண்டு மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...