பல்லடத்தில் குடிபோதையில் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபான கடையில் ராஜ்கமல், தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பால்காரர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேடபாளையம் ஸ்டாலின் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் உட்பட நான்கு பேரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்கமல் தான் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக நண்பர்களான தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மற்றொரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.



இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ராஜ் கமலை பல்லடம் போலீசார் கைது செய்தனர். மதுபோதையில், உடன் சென்ற நண்பர்களை சக நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...