கோவை கிராமங்களில் புகுந்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி 2வது நாளாக நீடிக்கிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சீட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னாயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது.

ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது மேலும் ஒரு வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்றிலிருந்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதி நோக்கி வந்த யானையை 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.



மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதிக்கு வந்த யானை, புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.



குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று விலகி இருக்கும் மக்னா யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றைய தினம் யானை இருக்கும் பகுதிக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர் என தெரிவித்திருந்ததையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாதபட்சத்தில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி மக்னாவை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Festive Season: Special Trains to Operate Between Chennai and Kollam via Coimbatore

Southern Railway will operate weekly special trains between Chennai and Kollam via Coimbatore, Salem and Erode from Octo...

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...