கோவையில் கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில்,நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ட்ரோனை கட்டுப்படுத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.


கோவை: கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்தது.



அதன்படி ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ட்ரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.



அதே சமயம் கலவரம் நிகழ்வது போன்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது போன்றும் கலவர இடத்தில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் மாணவர்கள், பேராசிரியர்கள், கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...