கோவை காந்திபுரத்தில் கத்தி முனையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது!

கோவை காந்திபுரத்தில் உள்ள டாஸ்மாக் பார் சப்ளையர் ராஜ்குமாரிடம், கடை திறப்பதற்கு முன்பே மதுபாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரம் அருகே டாஸ்மாக் பார் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை, 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர் ராஜ்குமார் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த மோசஸ் (28), வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே கோவையில் உள்ள காவல் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...