கோவை பன்னிமடை அருகே போர்வெல் குழாய்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, போர்வெல் குழாய்கள், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது.



தோட்டத்தில் இருந்த போர்வெல் பைப்புகள், பில்டர் பைப்புகளை உடைத்த காட்டு யானை, 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...