உடுமலை - மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம்: வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை அறிவுறுத்தல்

உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலைகளில் செல்வோர் வாகனங்களை மெதுவாக இயக்குமாறும், விலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை-மூணாறு சாலையில் வன விலங்குகள் உலா வருவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்குத் தொடர்ச்சி பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளையே அதிகம் நம்பி உள்ளது.

கடந்த சில நாட்களாக யானை, மான் உள்ளிட்டவை வனப்பகுதிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில், அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்குத் தொந்தரவு கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளைத் துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலையைக் கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவைகள் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...