இந்தியாவில் 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்ட 100 நகரங்களில் 22 நகரங்கள் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2016-2018-க்கு இடையில் நடத்தப்பட்ட நான்கு சுற்றாக மேற்கொண்ட ஆய்வு மூலம் 100 நகரங்களை மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய நகரங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்த நகரத்தில் வாழும் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம், தூய்மையான சூழலை வழங்குவதோடு, பல்வேறு பிரச்சினைகளுக்கு "ஸ்மார்ட் தீர்வுகளை" கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தில் போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, ராஞ்சி, சேலம், சூரத், உதய்பூர், விசாகப்பட்டினம், அகமதாபாத், காக்கிநாடா, புனே, வேலூர், பிம்ப்ரி-சின்ச்வாட், மதுரை, அமராவதி, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த 22 நகரங்களில் நடைபெற்று வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் முழு பணிகளும் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாறிவிடும். இது மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதளவில் உயர்த்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் ராஜ்யசபாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட ரூ.1,81,322 கோடி மதிப்பிலான 7,804 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 5,246 திட்டங்கள் ரூ.98,796 கோடி மதிப்பில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார், மிஷன் வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கும், சராசரியாக ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி என்ற அளவில் இருக்கும். அதோடு மாநில அரசு அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் சமமான தொகை இந்த நகரங்களுக்கு அளிக்கப்படும்.

மீதமுள்ள 78 நகரங்களில் திட்டங்கள் அடுத்த 3-4 மாதங்களில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கூடுதல் நகரங்களைச் சேர்ப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...